சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

singapore999 24 1508835986 1573127383
singapore999 24 1508835986 1573127383

சிங்கப்பூரில் கடந்த 3 வாரங்களில் நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தக் காலப்பகுதியில் 160க்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை பிரிவுகளில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.