புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவிப்பு!

K 4 Ballistic missile
K 4 Ballistic missile

தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா நேற்று (19) குற்றஞ்சாட்டியிருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரியா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஷின்போ பகுதியிலிருந்து கிழக்கு கடல் பரப்பில் குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நீர்மூழ்கி கப்பலிலிருந்து குறித்த ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இதற்கான வசதிகள் வடகொரியாவிடம் காணப்படுவதாகவும் தென்கொரிய தரப்பினர் நேற்று (19) குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.