எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதி!

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குக் குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில், அது தொடர்பான சிகிச்சைக்காக எடப்பாடி பழனிச்சாமி இன்று அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.