ஜோ பைடன் வெளியிட்ட கருத்து அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் இல்லை

Joe biden USA 23062020
Joe biden USA 23062020

தாய்வான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பானது, அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்துமாக இருந்தால், அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவளிக்கும் என்று அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

வொசிங்டனில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தாய்வானை பாதுகாக்க வேண்டிய ‘அர்ப்பணிப்பு’ ஒன்று அமெரிக்காவுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பானது, அமெரிக்கா தாய்வான் விடயத்தில் நீண்டகாலமாக கடைபிடித்துவரும் தெளிவற்றக் கொள்கையில் இருந்து விடுபடும் வகையில் அமைந்திருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

எனினும் இந்த அறிவிப்பு அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்தவில்லை என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.