ஜேர்மனியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 33,000ஐ விட அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார தகவல்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 33,949 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார நிறுவகமொன்றின் தகவல்களை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 33,777 எனும் எண்ணிக்கையானது, நாளாந்த தொற்றாளர்களின் அதிகரித்த எண்ணிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில், குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை, 46 இலட்சத்து 62 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், 96 ஆயிரத்து 623 கொவிட் மரணங்களும் அங்கு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.