இந்தியாவில் நீடிக்கும் கனமழை

கனமழை 750x375 1
கனமழை 750x375 1

தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் இது நவம்பர் 9ஆம் திகதி மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.