தமது எல்லையில் ஆயுதமேந்திய பாதுகாப்பு தரப்பினரை அதிகரிக்க நேரிடும் – போலந்து

poland aerial view of wroclaw in the morning
poland aerial view of wroclaw in the morning

பெலருஸூடனான தமது எல்லையில் ஆயுதமேந்திய பாதுகாப்பு தரப்பினரை அதிகரிக்க நேரிடும் என போலந்து எச்சரித்துள்ளது.

பெலருஸின் அண்டைய ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்க நூற்றுக்கணக்கான மக்கள் முற்படுவதாக அஞ்சப்படுகின்றது.

மேலதிக துருப்பினர்கள் தற்போது குறித்த எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் போலந்து அறிவித்துள்ளது.

எல்லை பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவதற்கு மக்கள் முற்பட்டமையை அடுத்து மேலதிக துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகப் போலந்து கூறுகின்றது.

அத்துடன் குஸ்னிகாவில் உள்ள பெரிய எல்லையை மூடுவதாகவும் போலந்து அறிவித்துள்ளது.

போலந்தின் கிழக்கு எல்லையில் சுமார் 4,000 பேர் புலம்பெயர்ந்து நெருக்கடியில் உள்ளதாகவும், சிலர் மரணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.