வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு

தேனி மாவட்டம் 750x375 1
தேனி மாவட்டம் 750x375 1

தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அணைக்கு வரும் உபரிநீரான ஆயிரம் கன அடி நீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் அனைத்தும் ஆறு வழியாக செல்வதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.