நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் திருமண பந்தத்தில் இணைந்தார்

malala
malala

பெண்களின் கல்விக்காகப் போராடி, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், இஸ்லாமிய வழக்கப்படி பிரிட்டனிலுள்ள தனது இல்லத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டார்.

தனது திருமண புகைப்படங்களை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (24), பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்.

பெண்களின் கல்விக்கான போராடிய மலாலா மீது, 2012 ஆம் ஆண்டு தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி ரவை கழுத்தில் பாய்ந்ததால் பலத்த காயமடைந்த மலாலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றிருந்தார்.

உயிராபத்துக்கு மத்தியிலும் தொடர்ந்தும் பெண் பிள்ளைகளின் கல்விக்காகவவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், 2014 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, 17 வயது சிறுமியாக இருந்த மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

உலகத்திலேயே சிறிய வயதில் நோபல் பரிசுப் பெற்றவர் என்ற பெருமையும் மலாலா பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.