ஜேர்மனியில் கொவிட் பரவல் அதிகரிப்பு

VirusBackrounderLead
VirusBackrounderLead

கொவிட் பரவல் காரணமாக ஜேர்மனியில் எதிர்காலத்தில் ஒரு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கொவிட்நான்காம் அலை காரணமாக ஜேர்மனியில் நாளாந்தம் 40,000 பேர் வரை பாதிக்கப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஜேர்மன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.