தாயின் பொறுப்பை உணர்ந்த நியூசிலாந்து பிரதமர்!

Jacintha Orton 2020 11 06
Jacintha Orton 2020 11 06

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், கொவிட் தொற்றுநோய் குறித்து முகநூலில் நேரடி கலந்துரையாடலில் இணைந்திருந்தபோது, அவரது மூன்று வயது மகள் இடைக்கிடையே குறித்த கலந்துரையாடலில் குறுக்கிடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்தக் காணொளியில் அவரின் மகள், நீங்கள் இல்லாமல் என்னால் உறங்க முடியாது எனக் கூறுகிறார்.

இருப்பினும், நியூசிலாந்து பிரதமர் அவரைத் தனது பாட்டியுடன் படுக்கைக்குச் செல்லுமாறு கூறி ஆறுதல் படுத்திய பின்னர் மீண்டும் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார். இதன்போது சிறு குழந்தைகளைப் பற்றியும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் இடைநடுவே மீண்டும் ஒரு சிறிய குரல், அம்மா நீங்கள் முடித்துவிட்டீர்களா அல்லது இன்னும் நேரம் எடுக்குமா என்று கேட்கிறது.

இதன்போது பிரதமர் தனது மகளுக்கு, “ஆமாம், இது நிறைவடைய சிறிது நேரம் ஆகும்” என்று பதிலளித்தார்.

ஆனால், தாயின் பொறுப்பை உணர்ந்த நியூசிலாந்து பிரதமர், குழந்தைகளை சரியான நேரத்தில் உறங்க வைப்பது அத்தியாவசியமானது என்று கூறி, எந்த இடையூறும் இல்லாமல் மீண்டும் கலந்துரையாடலில் இணைவதாக உறுதியளித்து குறித்த கலந்துரையாடலிலிருந்து வெளியேறினார்.