சென்னையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடும் மழை!

Rainning
Rainning

சென்னையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா ஊடாக சென்னையை கடந்து செல்லும் எனத் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சியானது தற்போது 54 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் கடந்த முதலாம் திகதி முதல் இதுவரை 77 சதவீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.