உலகளாவிய ரீதியில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 51 இலட்சத்தை கடந்தது

coronavirus banner
coronavirus banner

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, உலகளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,104,603 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களில் 76,000க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

சீனாவின் வுகான் நகரில் ஆரம்பமான கொவிட்-19 பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.