ஈக்குவடோரில் சிறைக்கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 68 பேர் பலி

Turi jail in Cuenca Ecuador
Turi jail in Cuenca Ecuador

ஈக்குவடோரில் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 68 பேர் உயிரிழந்ததோடு 25 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் உள்ள சிறைச்சாலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற மோதலில் சுமார்  100 கைதிகள் மரணித்தனர்.

இந்நிலையில் அங்கு மீளவும் மோதல் ஏற்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிகளவான இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஈக்குவடோரில் ஆண்டின் இதுவரையாக காலப்பகுதிக்குள் மாத்திரம் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல் காரணமாக 300 பேர் உயிரிழந்துள்ளனர்.