இந்தியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா!

590983
590983

ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணை பாதுகாப்பு தொகுதியினை இந்தியா வாங்கியமை தொடர்பாக அமெரிக்கா எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லையென இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பங்காளி நாடுகள் ரஷ்யாவுடனான பரிவர்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னதாக அமெரிக்க ஜோ பைடனின் நிர்வாகம் கோரியிருந்தது.

எப்படியிருப்பினும் இந்தியாவிற்கு எதிராகப் பொருளாதார தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து தீர்மானிக்கவில்லையென பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பினை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்காக இந்தியா 5.43 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்காவின் பொருளாதார சட்டத்தின் கீழ் வடகொரியா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.