ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா

John Le Carre 1
John Le Carre 1

தமது சொந்த செயற்கை கோளிற்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆயுத சோதனை நடவடிக்கை ஆபத்தானது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அத்துடன் இந்தச் செயற்பாடு பொறுப்பற்றதெனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.

இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தமது சொந்த செயற்கை கோள் ஒன்றை வெடிக்க செய்துள்ளது.

இது பூமியின் சுற்றுவட்டத்தில் மாசடைய செய்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் விண்வெளியை ஆயுதமாக்குவதை எதிர்க்கும் ரஷ்யாவின் கருத்துகள் உண்மைக்குப் புறம்பானாதெனத் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.