இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920
vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 865 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 38 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 1 இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் 197 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.