சந்திரயான்-3 திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் அனுமதி

chandrayan
chandrayan

சந்திரயான் -3 திட்டம் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக 615 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவித்தார்.

பெங்களூருவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் சிவன் இது தொடர்பில் தெரிவிக்கையில் ;

சந்திரயான்-2 திட்டத்தின் போது பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாகக் கட்டிப்பிடித்ததால், அழுதுவிட்டேன்.

சந்திரயான்-2 திட்டத்தில், திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், வேகமாகச் சென்று நிலவில் மோதியதால் அதனை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது.

இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கி, நிலவு பற்றிய அறிவியல் தகவல்களை அனுப்பும் என்று கூறினார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. இதேபோல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்திலும் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.