கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7 பேர் கைது

1637992767 lorry 2
1637992767 lorry 2

ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லொறியை கடத்தி வந்த முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 கோடி மதிப்பிலான 8தொன் எடை கொண்ட முந்திரி பாரம் ஏற்றிய லொறியை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திக்கு கடத்திச் சென்ற ஏழு பேர் கொண்ட கும்பலை, நாமக்கல் மாவட்ட காவற்துறையினர் உதவியுடன் தூத்துக்குடி மாவட்ட காவற்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த கடத்தலில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெபசிங் உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை 7 பேரையும் காவற்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். லொறியை பறிமுதல் செய்து தூத்துக்குடி கொண்டு சென்றனர்.