முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இருவர் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம்!

Australia 1 850x460 acf cropped
Australia 1 850x460 acf cropped

டெல்டாவை விட ஆபத்தான ‘ஒமிக்ரொன்’ கொவிட் திரிபுடன் அவுஸ்திரேலியாவில் முதல் தடவையாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவிலிருந்து சிட்னி திரும்பிய இரு பயணிகளே இவ்வாறு ‘ஒமிக்ரொன்’ கொவிட் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து தோஹா ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் அவர்கள் இருவருக்கும் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களுடன் மேலும் 12 பேர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள போதிலும் அவர்களுக்குத் தொற்று உறுதியாகவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, தென் ஆபிரிக்காவில் முதன் முதலாக அடையாளம் காணப்பட ‘ஒமிக்ரொன்’ கொவிட் வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலேயே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வௌிநாட்டவர்களுக்கு தடை விதித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.