ஐ.எஸ் பயங்கரவாத ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

isis
isis

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சிறுபான்மை சமய குழுவைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை ஒன்றை கொன்றமையானது முழுதான இனப்படுகொலை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட குழந்தையின் தாயாருக்கு 57,000 அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழு இனப்படுகொலைகளில் ஈடுபட்டமை சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

இது தவிர, தாங்க முடியாத பாலியல் வன்முறைக்கு பல பெண்கள் உட்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.