உயர்கல்விக்கு தலிபான் விதித்துள்ள தடைக்கு ஆப்கான் மாணவிகள் அதிருப்தி!

download 19
download 19

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உயர்தரங்களில் கல்வி கற்பதற்கு தலிபான்கள் விதித்துள்ள தடைக்கு அந்த நாட்டின் பாடசாலை மாணவிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தங்களது கல்வியை தொடர முடியாமல் போனமையானது மரண தண்டனையைப் போல் உணர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர் வெளியேறியதை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

இதனையடுத்து அங்கு ஆரம்ப பிரிவு மாணவிகளுக்கு மாத்திரம் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

விரைவில் உயர்தர மாணவிகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என தலிபான்கள் உறுதியளித்த போதிலும், காபூல், நங்ஹகார் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள உயர்தர வகுப்புகள் அடங்கிய மகளிர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு மற்றும் வறுமை காரணமாக பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தயங்குவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.