பஹாமஸ் டோரியன் புயல் தாக்குதலில் 2500 பேர் மாயம்

.jpg
.jpg

கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமஸ் மற்றும் அபகோ தீவுகளை டோரியன் புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. இதில் பஹாமஸ் தீவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்தத் தலைமுறைக்கான பேரழிவை இந்தப் புயல் விட்டுச் சென்றிருக்கிறது என்று டோரியன் தாக்கம் குறித்து பஹாமஸின் பிரதமர் கூறியிருந்தார்.

பஹாமஸில் கடுமையான டோரியன் புயல் தாக்குதல் காரணமாக 2500 பேர் மாயமானதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மேலாண்மை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டோரியன் புயலுக்கு பஹாமஸில் 43 பேர் பலியாகியதுடன் சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று பஹாமஸ் அரசு தெரிவித்தது.

பஹாமஸைத் தாக்கிய புயல் 5 வகையைச் சார்ந்தது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது வெப்பமண்டல சூறாவளி எனப்படுகிறது. பூமியில் உருவாகக்கூடிய சூறாவளிகளிலேயே மிகவும் வலிமையானது இவ்வகை சூறாவளி.