இந்தோனேஷியாவில் பாரிய நில அதிர்வு: ஆழிபேரலை எச்சரிக்கை விடுப்பு!

a92fcb9c 5ce77a90 e5388088 earth quake 850x460 acf cropped 850x460 acf cropped
a92fcb9c 5ce77a90 e5388088 earth quake 850x460 acf cropped 850x460 acf cropped

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 7.5 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதிக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள பிரதேசத்துக்கு வடக்கே 112 கிலோமீட்டர் (69 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி காலை 10:20 மணிக்குக் கடலில் 18.5 கிலோமீற்றர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.