இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

202104251227403047 Tamil News Tamil cinema Bigil cinematographer GK Vishnu wedding SECVPF
202104251227403047 Tamil News Tamil cinema Bigil cinematographer GK Vishnu wedding SECVPF

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பெண்களின் நலன்கருதி அவர்களது குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நிதி ஆயோக் என்ற சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதில் திருத்தம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்நிலையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்க அக்குழு பரிந்துரைகளை முன்வைத்து, மத்திய அரசிடம் அண்மையில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

அக்குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.