சர்வதேச ரீதியில் 8,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

airplane 1
airplane 1

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச ரீதியாக 8,000க்கும் அதிகமான விமான சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா செல்லும் விமான சேவைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான சேவைகளில் பணியாற்றும் பணியாளர் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளமையினால், சேவைகளை அதிக அளவில் ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தென்கொரியாவில் இருந்து ஹொங்கொங்கிற்கு செல்லும் விமானங்களுக்கு இரண்டு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.