ஃப்ரான்ஸில் நேற்று 179,807 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

download 50
download 50

ஐரோப்பிய நாடுகள் ஒமைக்ரொன் பரவலுக்கு மத்தியில் போராடிவரும் நிலையில், ஃப்ரான்ஸில் இதுவரையில் இல்லாத அளவில் நாளாந்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

179,807 பேருக்கு ஃப்ரான்ஸில் நேற்று கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

நத்தார் பண்டிகைக் காலத்தின், தாமதமாக அறிக்கையிடப்பட்ட எண்ணிக்கையுடன் இந்த அதிகரிப்பு இருக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் ஃப்ரான்ஸில் நாளொன்றுக்கு 250,000 என்ற அளவில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவர் வெரன் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.

அதேநேரம், மிகவும் கடினமான வாரங்கள் இன்னும் வரவில்லையென ஃப்ரான்ஸ் மருத்துவக் கூட்டமைப்பும் எச்சரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், ஃப்ரான்ஸில் செயலூக்கி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், 23 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு செயலூக்கி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.