இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் 7.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

earthquake
earthquake

இந்தோனேசியாவில் இன்று காலை 7.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பண்டா கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் தென்மேற்கு மலுகு மாவட்டத்தில் தியாகூர் நகரின் கிழக்கே 125 கி.மீ. கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் 183 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

தென்மேற்கு மலுகுவில் இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், வேறு சில சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை.

5.2 ரிச்டர் அளவுள்ள மிகப்பெரிய அளவிலான மூன்று அதிர்வுகளை பதிவாகியுள்ளது.

நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்களைத் தொடர்ந்து அறியவும், நிலநடுக்கத்தால் ஏற்படும் விரிசல்கள் அல்லது சேதமடைந்த கட்டிடங்களைத் தவிர்க்குமாறு அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.