ஜெனிவா பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவிடம் இருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரவுள்ள ரஷ்யா

VSPHPCGNWVJS7MEF2HUU6P6XDY 1
VSPHPCGNWVJS7MEF2HUU6P6XDY 1

ஜெனிவாவில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, மொஸ்கோ அமெரிக்காவிடம் இருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் ஜனவரி 10 ஆம் திகதி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

மொஸ்கோ-வொஷிங்டன் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ஜனவரி 10 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற உள்ளதாக ரஷ்யா இந்த மாத தொடக்கத்தில் உறுதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.