கான்பராவில் பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைப்பு!

1000 41 23
1000 41 23

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதியினை அந்த நாட்டு பழங்குடியினர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

கடந்த 15 நாட்களாக குறித்த நாடாளுமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் தமது இறையாண்மையை வலியுறுத்தி பழங்குடியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், இன்றைய தினம் இவ்வாறு தீயிட்டு கொழுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பாதுகாப்பு தரப்பினரால் உடனடியாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி சிறியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அரிதாகவே முன்னெடுக்கப்பட்டாலும், கொவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.