ஜோ பைடன் – விளாடிமீர் புட்டின் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல்!

download 60
download 60

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 50 நிமிடங்கள் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் உதவி கிடைக்க பெறும் யுக்ரேனுக்கிடையே நிலவும் சிக்கல் நிலை தொடர்பில் இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஆகியோருக்கிடையே 3 வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.