இந்தியாவில் 1,000க்கும் அதிகமான ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்!

NW02 scaled 2
NW02 scaled 2

இந்தியாவில் ஒமைக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் 23 மாநிலங்களில் இந்த திரிபு பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமைக்ரொன் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, குஜராத்தில் 97 பேரும், ராஜஸ்தானில் 69 பேரும், தெலுங்கானாவில் 62 பேரும் ஒமைக்ரொன் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் சீரான உடல்நலத்துடன் இருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.