கிழக்கு பப்புவா நியூ கினியில் நில அதிர்வு

download 2
download 2

கிழக்கு பப்புவா நியூ கினியில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

5.9 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நில அதிர்வு சொலமன் தீவு கடற்பகுதியில் 12 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவியதிர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் ஆழிப்பேரலை எச்சரிக்கை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பசுபிக் கடலில் ‘ரிங் ஒஃவ் ஃபயர்’ என அழைக்கப்படும் பிரதேசத்தில் பப்புவா நியு கினி உள்ளதன் காரணமாக டெக்டோனிக் தகடுகளுக்கு இடையேயான உராய்வு அதிகம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய பூமியதிர்வை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு சம்பவங்களின் போது பல வீடுகள் முற்றாக அழிந்து போனதுடன் குறைந்தது 125 பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று 2020 ஜூலை மாதம் இடம்பெற்ற மற்றுமொரு பூமி அதிர்வின் போது தலைநகரம் போட் மோசிபை பாரிய பாதிப்புக்கு உள்ளானது.