ஒமைக்ரொன் வைரஸ் திரிபுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் ஃபைஸர் நிறுவனம்!

600112
600112

ஒமைக்ரொன் வைரஸ் திரிபை இலக்காகக் கொண்ட கொவிட்-19 தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஃபைஸர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஒமைக்ரொன் திரிபுக்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆல்பர்ட் போர்லா (Albert Bourla) தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்களில் அதிகமானோருக்கு ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்றுறுதியாகியுள்ளது.

செயலூக்கி தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதன் ஊடாக நோய் தாக்கம் குறைவடைகின்றது.

எவ்வாறாயினும் ஒமைக்ரொன் வைரஸ் திரிபைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசி தயாரிக்கப்படுவதாக ஃபைஸர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.