வருங்கால வைத்தியர்கள் 7 போின் உயிரை பறித்த கோர விபத்து: இந்தியாவில் சம்பவம்

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1

இந்தியாவின் – மகாராஷ்டிர மாநிலத்தின் செல்சுரா என்ற கிராமத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மருத்துவ பீட மாணவர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த மாணவர்கள் பயணித்த வாகனம் பாலமொன்றிலிருந்து சுமார் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற வீதியில் சிறிய வளைவு இருந்தமையினால் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காரின் சிதைவுகளை பாக்குமிடத்து, ​​வாகனம் அதிவேகமாக பயணித்துள்ளது என்பதை அறியக்கூடிய முடிகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து நடந்த இடம் வழமையாக விபத்துகள் நடக்கும் இடம் அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்து நடப்பது இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.

இதேவேளை, இந்த சம்பவத்துக்கு நேற்றுமுன்தினம் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த அதேவேளை, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்தது.