விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செய்மதியை அழிக்கும் லேசர் ஆயுதம் சீனாவில் உருவாக்கம்!

118685688 chinagettyimages 83781196
118685688 chinagettyimages 83781196

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செய்மதியின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும் அல்லது அழிக்கும் வல்லமை கொண்ட லேசர் ஆயுதம் ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆர்.கே.ஏ என அறியப்படும் ரெலெட்டிவிஸ்டிக் க்ளைஸ்ட்ரன் அம்ளிபிபையர் என்ற இதனை, மைக்ரோவேவ் இயந்திரம் என்றும் அழைக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

5 மெகாவொட் மின்காந்த அலையை உருவாக்கக்கூடிய இதனை, சிவில் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், விண்வெளியில் உள்ள செய்மதியை, பூமியிலிருந்து தாக்கி அழிக்கமுடியாது. எனினும், செய்மதி ஒன்றை செலுத்தி, எதிர்தரப்பு செய்மதியை தாக்கக்கூடியதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை அதி சக்திவாய்ந்த ஆயுதம் என்று விவரிக்கலாம் என தாய்வானின் ஏசியா டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.