அமெரிக்காவில் காற்றாலை மூலம் அதிகளவில் மின்சாரம் உற்பத்தி

download 2
download 2

அமெரிக்காவில் காற்றாலை மின் உற்பத்தி முதன்முறையாக நிலக்கரி மற்றும் அணுசக்தியினால் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தின் அளவை மிஞ்சியுள்ளது.

அமெரிக்காவின் 48 மாநிலங்களில் உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள், மார்ச் 29 ஆம் திகதி 2017 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

அதன்படி அன்றைய தினம் அமெரிக்காவில் நிலக்கரி மற்றும் அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்தியை விட காற்றாலை மூலம் அதிகளவில் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது