மரியுபோலில் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள ரஷ்யா

image 750x 626fd6d49adca
image 750x 626fd6d49adca

நூற்றுக்கணக்கான பொது மக்கள் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் சிக்கியுள்ள நிலையிலும் மரியுபோலில் ரஷ்யா மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக யுக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலைக்கு அருகில் சகல விதமான ஆயுதங்களாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக யுக்ரைன் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

மரியுபோலில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் வரை 100க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குறித்த இரும்பு தொழிற்சாலையில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து யுக்ரைன் இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் ரஷ்யா மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.