யுக்ரைனில் இருந்து 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏதிலிகளாக வெளியேற்றம் – ஐ.நா

ஐ நா
ஐ நா

யுக்ரைனில் இருந்து 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏதிலிகளாக வெளியேறியுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் வரையில், 60 இலட்சத்து 29 ஆயிரத்து 705 பேர் ஏதிலிகளாக வெளியேறுள்ளனர்.

அவர்களில் 90 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர் என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம், 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள், இராணுவ நடவடிக்கைக்காக நாட்டிலிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.