யுக்ரைனுக்கு கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ஜப்பான் கைச்சாத்து

ஜ்பான்
ஜ்பான்

யுக்ரைனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த நிதியுதவியானது உலன வங்கியுடன் இணைந்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் யுக்ரைன் இராணுவ நோக்கங்களுக்காக இந்த நிதியை பயன்படுத்தாது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பி சென்றுள்ள உக்ரைனியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஜப்பான் நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.

டோக்கியோ மற்றும் ஒசாகாவில் இந்த வாரம் முதல் உக்ரைனியர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் வதிவிடம் தொடர்பான இலவச ஆலோசனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.