தடம் புரண்ட ரயில்- 50 பேர் பலி

rail accident
rail accident

கொங்கோ நாட்டில் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்டதில் 50 பேர் பலியாகியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவின் டாங்கான்கியா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் முதல் கட்டமாக 50 பேர் பலியாகினர் எனவும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அந்நாட்டு மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவ் பிகாயி டிவிட்டரில் ‘மற்றொரு பேரழிவு’ என குறிப்பிட்டு அரசாங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். விபத்துக்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.

ஆனால் பல போக்குவரத்து விபத்துக்கள் கொங்கோவில் அடிக்கடி நிகழ்கின்றன.

  • மார்ச் மாதத்தில் மத்திய கசாய் மாகாணத்தில் ஒரு சரக்கு ரயில் ரயிலில் கவிழ்ந்ததில் குறைந்தது 24 பேர், பெரும்பாலும் குழந்தைகள் இறந்தனர்.
  • 2017 ஆம் ஆண்டில் தெற்கு லுவாலாபா மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஆற்றில் கவிழ்ந்ததில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.