பிரேசில் அரசுக்கெதிராக ஒன்றிணைந்துள்ள பழங்குடி மக்கள்

.jpg
.jpg

ஒருமுறை மழை காடு ஒன்றில் ஒரு மரம் விழுந்தால் அங்கு மீண்டும் அது முளைக்க பல வருடம் ஆகும். இதனால் மழைக்காடுகளை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மழை காடான அமேசனில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பரம எதிரிகளாக காணப்பட்ட இரு பழங்குடி மக்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.

கயாபோ இனக்குழுவும், பனரா இனக்குழுவும் கடந்த பல தசாப்தங்களாக சண்டையிட்டு வருகின்றனர். 1968 ஆம் ஆண்டு கயாபோ இனக்குழு துப்பாக்கிகளுடன் வந்து பனரா இனக்குழுவைத் தாக்கியதில் 26 பனரா பழங்குடிகள் பலியாகினர்.

இந்நிலையில் ஒன்றிணைந்த இந்த இருதரப்பு பழங்குடிகளும், “இப்போது எங்களுக்கு எதிராக எந்த பிணக்கும் இல்லை, எங்களது ஒரே எதிரி எங்களது நிலத்தை அபகரிக்கப் பார்க்கும் சயீர் பொல்சனாரூ தலைமையிலான
பிரேசில் அரசுதான்”
எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாத வலதுசாரி சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்ட சயீர் பொல்சனாரூ தேர்தல் பிரசாரத்தின் போதே, “பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்” கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.