பாகிஸ்தானில் முதலாவது காவல்துறை அதிகாரியாக நியமனம் பெற்ற இந்து பெண்!

pushpa kohli
pushpa kohli

ஜனவரியில் இந்து மதத்தைச் சேர்ந்த சுமன் பவான் போதானி என்ற பெண் முதன் முறையாக பாகிஸ்தானில் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் காவல்துறை துணை ஆய்வாளராக இந்து மதத்தைச் சேர்ந்த பெண் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா கோஹ்லி எனப்படும் இப்பெண் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகவலானது டுவிட்டர் மூலம் மனித உரிமைகள் நல ஆர்வலர் கபில் தேவ் என்பவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இவரும் மிகவும் வறிய நிலையில், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத சூழலில் பல கஷ்டங்களையும், சவால்களையும் தாண்டி இந்த நிலைமைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.