சிரிய உள்நாட்டுப் போரில் 39 பேர் பலி

siriya
siriya

சிரியாவில் அதிபரின் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் 39 பேர் உயிரிழந்தனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற வகையில் ரஷ்யா மற்றும் துருக்கி மேற்கொண்ட சமரச முயற்சிக்கு பின்னர் கடந்த 12ம் திகதி யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது,

இந்நிலையில் நேற்று முன்தினம் இரு படைகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் ஒரே நாளில் மாத்திரம் 39 பேர் பலியாகினர்.

கிளர்ச்சியாளர்கள் படையில் 22 பேரும், அதிபர் ஆதரவு படையில் 17 பேரும் பலியானதாக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியது.

அத்துடன் பொதுமக்கள் சார்பில் 18 பேர் பலியாகியுள்ளதாக அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.