ஜெர்மன் மீது ஏவுகணைத் தாக்குதல்

1 At
1 At

யெமனிலுள்ள இராணுவ குடியிருப்புகள் மீது நடாத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 60 வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யெமனின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை ஒன்றின் மூலமே நேற்று சனிக்கிழமை இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதில் 60 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்,  பலர் பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லையெனவும் அல்ஜெஸீரா செய்திகள் கூறியுள்ளன.

யெமன் ஜனாதிபதி மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஹூதி கிளர்ச்சியாளர்கள் பல வருடங்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச்சில் இருந்து ஹாடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுவருவதாகவும் அச்செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.