250 கிலோ எடையுள்ள நபர் ஒருவர் ஐ.எஸ். பயங்கரவாதி?

0 bb
0 bb

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஒருவர் ஐ.எஸ். பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக செயற்பட்ட முப்தி அபு அப்துல் பாரி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 250 கிலோ (560 பவுண்டுகள்) உடல் எடை கொண்ட அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியும் வந்துள்ளார்.

அவரை ஈராக்கிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் வைத்து கைது செய்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட முப்தியை காரில் ஏற்ற முடியவில்லையெனவும் அதிக உடல் எடையுடன் உடல் பருமன் பெரிதாக காணப்படுவதனால்,  அவரை லொரி ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு விசுவாசமுடன் செயல்படாத இஸ்லாமிய மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் முப்தி பிறப்பித்து இருந்ததாகவும் இவர் மீது ஈராக்கிய பொலிஸார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.