ஜப்பானில் மரண தண்டனைக்கு 80 சதவீத மக்கள் ஆதரவு

99797312 gettyimages 869590262 1
99797312 gettyimages 869590262 1

ஜப்பானில் மரண தண்டனைக்கு 80 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுந்தது. இதையடுத்து மரண தண்டனை தொடர்பாக மக்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது.

அதில், 80 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜப்பான் அரசாங்கம் நேற்று முன்தினம் (18) அறிவித்தது.

அதன்படி, 9 சதவீத மக்கள் மட்டுமே மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். 80.8 சதவீத மக்கள் அதை தொடர வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் ஜப்பானில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.