அது என்னை கவர்ந்தது – உலகின் மூத்த ஜோடி.

mm2 2
mm2 2

உலகில் முதுமையான வயதில் வாழும் ஜோடிகளில் மூத்த ஜோடியான ஜான் – சார்லட் என்பவர்கள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.

ஜான் என்பவருக்கு 106 வயதாகிறது. ஜானின் மனைவியான சார்லட்டின் வயது 105. இவர்கள் 85 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தாலும் முதல் ஐந்து ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்களின் திருமண பந்தத்தின் 80 ஆண்டுகளாக இணை பிரியாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் ஜோடியை இணைக்கும் நீண்ட நாள் பந்தத்திற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த ஜோடி இடம் பிடித்திருக்கிறார்கள்.

நான் சார்லட்டைச் சந்தித்தது கல்லூரியில் படிக்கும் போது தான். அந்த சந்திப்பு 1934 -இல் உயிரியல் வகுப்பில் நடந்தது.

வகுப்பில் சார்லெட் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் நான் அமர்ந்திருந்தேன். சார்லட்டைப் பார்க்க நேர்ந்த போது சார்லட் வெட்கப்பட்டாள்.

அது என்னைக் கவர்ந்தது. காதலில் விழுந்தேன் என்கிறார் ஜான். ஜான் என்னைப் பின்னாலிருந்து பார்ப்பது எனக்குத் தெரியும் அவரை எனக்குப் பிடித்திருந்தது என்கிறார் சார்லட்.

இதைச் சொல்லும் போதும் இப்போதும் வெட்கம் அவர் முகத்தில் குடியேறுகிறது. இந்த காதல் ஜோடிக்கு குழந்தைகள் இல்லை. தற்போது, முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.