கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

110628581 china 2
110628581 china 2

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 850 க்கும் மேற்பட்டோர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கவிருந்த சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் வுஹான் மற்றும் ஹூபே மாகாணங்களில் அனைத்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது