அல்ஜீரிய விமான விபத்தில் இரு விமானிகள் பலி

aljeeria
aljeeria

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

ராணுவ விமான தளத்தில் இருந்து சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமான தளத்துக்கு அருகிலேயே விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இவ் விமான விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.